இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக.. அமரன் படத்திற்காக கமல்ஹாசன் செய்த மிகப்பெரிய விஷயம்…!!

By admin on ஐப்பசி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

   

இதுவரை சிவகார்த்திகேயன் இது போன்ற படத்தில் நடித்தது கிடையாது. தனக்கு வந்த வாய்ப்பே சிவகார்த்திகேயன் பயன்படுத்திக் கொண்டார். அமரன் திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

இந்தியாவில் இதுவரை ராணுவ அதிகாரி தொடர்பான ஏராளமான படங்கள் வந்துள்ளது. ஆனால் அதில் இல்லாத ஒரு சிறப்பம்சம் அமரன் படத்தில் உள்ளது. அது என்னவென்றால் காஷ்மீரில் சோபியா என்ற ஊர் உள்ளதாம். அங்கே சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கிடையாது. ஆனால் கமல்ஹாசன் சிறப்பு அனுமதி வாங்கி அங்கே ஷூட்டிங் நடத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முகுந்து வரதராஜன் தங்கி இருந்த ராணுவ முகாம்களிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக சென்னையில் ராணுவ பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் ஓடிஎன். அங்கு முதல் முறையாக அமரன் படத்தின் ஷூட்டிங் நடத்தியுள்ளனர். இதற்கு முன்பு எந்த படத்திற்கும் இப்படி அனுமதி கிடைத்தது கிடையாது. இதனால் அமரன் படத்தின் மீது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.