“தளபதிக்காக களமிறங்கிய உலகநாயகன்!… ‘மெஜாரிட்டியை சபையில்தான் காட்டணும்’… ஆளுநரை லெப்ட்-ரைட் வாங்கிய கமல்… தமிழக அரசியலில் புதிய திருப்பம்”…!!!

By Muthu Mani on வைகாசி 7, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல” என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்று, பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படப்போவதாக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியைப் பாராட்டிய கமல்ஹாசன், அதே முதிர்ச்சியை அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர்களும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைக்காமல் தாமதப்படுத்துவது, தமிழக மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மாநிலத்திற்கே நேரும் அவமானம் என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

   

தற்போதுள்ள அரசியல் சூழலில், விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 117 இடங்களை விடச் சற்று குறைவாக உள்ளதால் ஆளுநர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிபிஐ மற்றும் விசிக போன்ற கட்சிகள் வரிசையாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் இந்தக் குரல் விஜய்க்குப் பெரும் அரசியல் பலமாகப் பார்க்கப்படுகிறது. இது கட்சி சார்ந்தது அல்ல, ஒரு குடிமகனாகத் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் கொள்கைக் குரல் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.