Categories: சினிமா

44 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் கமல்… மக்கள் காத்திருந்த அந்த கூட்டணி… இவர் தான் இயக்குநரா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினியும் , கமலும் வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்பிறகு ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷியும் அவரது கதையையும் நம்பி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டது.

அப்படி உருவான திரைப்படம் தான் மாநகரம். அழகான திரைக்கதையை குறைவான பட்ஜெட்டில் அமைத்து ரசிகர்களை கவர்ந்தார். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனார். அதன்பின்னர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைக்கு மிகவும் சிறப்பான கதை அம்சத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

அதைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படம் ,கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ திரைப்படம் போன்றவற்றை இயக்கி மிகவும் பிரபலமானார். லோகேஷின் படங்களை ‘லோகேஷ் யுனிவர்ஷ்’ என ரசிகர்கள் கூறத் தொடங்கினார்கள். அந்த வகையில் தற்போது லியோ திரைப்படமும் LCUவில் வந்துவிட்டது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை  இயக்க உள்ளார்.

தற்பொழுது தலைவர் 171ஐ   விக்ரமுடன் LCUவுக்கு கொண்டு வர எண்ணியுள்ளார் லோகேஷ்.  இந்தப்படத்துக்கு கமல் ஏற்கனவே அனுமதி கொடுத்துவிட்டார் எனவும், தலைவர் 171ல் கமல் 7 நிமிடங்கள் நடிப்பதாகவும், படம் 2024 மார்ச்சில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. தலைவர் 171 க்கு அனிருத் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கமல், ரஜினி இருவரும் இணைந்து எப்போது படம் நடிப்பார்கள் என்று காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி தற்பொழுது கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

Begam

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

42 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

49 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

56 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

1 மணத்தியாலம் ago