#image_title
என்ன தான் 4 வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடித்தாலும், தனக்கான மார்க்கெட் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்தவர் கமல். விக்ரம் படம் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்த கமல், தற்போது கைவசம் வரிசையாக 7 படங்களை வைத்துள்ளார். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாரு இளம் இயக்குநர்கள், பல ஆண்டுகள் கழித்து ஃபேவரைட் இயக்குநருடன் இணைந்த படம் என அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியன் 2 & இந்தியன் 3:
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்ட இந்தியன் படத்தின் 2 மற்றும் 3-ம் பாகம் வெகு நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, உயிரிழப்பு, கொரோன ஊரடங்கு என தள்ளிப் போன இப்பட படப்பிடிப்பு ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் சிஜி வேலைகளுக்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளார் இயக்குநர் சங்கர். படம் எப்படியும் இந்த வருடம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#image_title
கல்கி 2898 AD:
நாக அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் நெகட்டிவ் ரோல் ஏற்றுப்பதாகவும் இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த படத்திற்கு கமலஹாசனுக்கு மட்டும் 150 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.
KH233:
எச்.வினோத் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, சிவராஜ்குமார் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் கமலின் கால்ஷீட் கிடைக்காமல் பேச்சுவார்த்தையுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது இப்படம்.
KH234:
மணிரத்னம்-கமல் காம்போ, இணைந்து கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆகிறது. 1987-ல் இணைந்த இந்தக் கூட்டணி தக் லைப்ஃ படம் மூலம் மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்தின் போடர் சமீபத்தில் வெளியாகி கமல்ஹாசனின் நாயகன் படத்தை நினைவுப்படுத்தியது. ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் என முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
#image_title
விக்ரம் 2:
2022-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக வெளியானது விக்ரம் திரைப்படம். இப்படத்தில் தெறிக்க விட்டிருந்த கமலின் நடிப்பால், வசூலையும் வாரிக்குவித்தது. இதேக் கூட்டணி மீண்டும் இப்படத்தின் 2-ம் பாகத்திற்காக இணைய இருப்பதாகவும், இப்படம் 2025-ம் ஆணு நவம்பரில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
KH237:
2025 ஆண்டு ஆக்சனை மையமாக வைத்து துவங்க உள்ள கமலின் KH237 படத்தை அன்பறிவு சகோதரர்கள் இயக்க உள்ளனர். கபாலி, விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர் இச்சகோதரர்கள். கேஜிஎப் படத்திற்காக இச்சகோதரர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#image_title
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
திருப்பத்தூர் அண்ணாநகர் கூட்டுச் சாலையில், தனியார் பேருந்து ஒன்று கல்லூரிப் பேருந்து மீது அதிவேகமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.…
ஆபத்தான வெள்ள நீரில் சிக்கி கரை சேர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த மனிதர் ஒருவரை, யானை ஒன்று கவனித்து அவரிடம்…
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கத் தங்களுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில்…
டெல்லி விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் டியூட்டி-ஃப்ரீ கடைகள் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த டாமன் சும்ப்ரோகல் என்ற கட்டிடக் கலைஞர்…
பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பாக தற்போது ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் காமன் மேன்' தேர்வு நிகழ்ச்சி…