விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரை பிக் பாஸ் தமிழ் 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்போது எட்டாவது சீசன் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் இந்த சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி இருந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இடைவெளி எடுப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் நடிக்க வேண்டி இருப்பதால் இனி வரவிருக்கும் பிக்பாஸ் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியாது. இதுவரை உங்கள் இல்லங்களில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

உங்கள் அன்பையும், பாசத்தையும் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். போட்டியாளர்களின் உற்சாகமான ஆதரவும், ஆர்வமும் தான் இந்தியாவின் தலைசிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சி மாறுவதற்கு காரணம். தனிப்பட்ட முறையில் உங்கள் தொகுப்பாளராக இருந்து அங்கு நான் எனது கற்றலை நேர்மையாக பகிர்ந்து கொண்டேன்.

இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் ஒவ்வொருவருக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக விஜய் டிவிக்கும் பிக் பாஸ் குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களால் தான் இந்த வெற்றியை அடைய முடிந்தது. இந்த சீசன் இன்னொரு வெற்றியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
