Connect with us

அந்த கதையில நான் தான் நடிக்க இருந்தேன்.. என்னை விட நீங்க பயங்கரமா நடிச்சிருக்கீங்க.. நெப்போலியன் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசிய உலக நாயகன்..!

CINEMA

அந்த கதையில நான் தான் நடிக்க இருந்தேன்.. என்னை விட நீங்க பயங்கரமா நடிச்சிருக்கீங்க.. நெப்போலியன் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பேசிய உலக நாயகன்..!

 

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு பல படங்களில் நடித்திருக்கின்றார். இவரின் திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

   

இதுவரை கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெப்போலியன் தமிழ் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்திருக்கின்றார். திரைப்பட நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்திருக்கின்றார். தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இவரின் கதாபாத்திரம் மிகுந்த பாராட்டை பெற்றிருக்கும்.

அதிலும் தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம், தாயகம், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்கள் வெற்றி படங்களாக இருந்திருக்கின்றது. நெப்போலியன் ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். அந்த வகையில் எட்டுப்பட்டி ராசா என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழக மாநில விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் கலிமாணி எம்ஜிஆர் உள்ளிட்ட விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. படுபிசியாக சினிமாவில் நடித்து வந்த நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட அரியவகை நோயால் கை கால்கள் செயலிழந்து போனது. இதனால் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கின்றார். அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றை சொந்தமாக நடத்தி வரும் நெப்போலியன், பல ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்தும் சம்பாதித்து வருகின்றார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நெப்போலியன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் சீவலப்பேரி பாண்டியன் படத்தை பார்த்து கமலஹாசன் தன்னை பாராட்டியதை பற்றி பேசி இருந்தார். சீவலப்பேரி பாண்டியன் படத்தில் முதலில் ஹீரோவாக நடித்த இருந்தது நான். தான் சில காரணங்களால் என்னால் நடிக்க முடியாமல் போனது .அந்தப் படத்தில் நான் நடித்திருந்தால் கூட அவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் கமலஹாசன்.

மேலும் நெப்போலியன் கமலஹாசனிடம் உங்களுடன் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று கூற மூன்று வருடம் கழித்து என் அலுவலகத்திற்கு போன் செய்து வாருங்கள் என்று அழைத்தார் கமலஹாசன். உடனே அங்கு சென்று அவரைப் பார்த்தேன் கதை கூறினார் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது.

ஆனால் எனக்கு சிறு தயக்கம் இருந்தது ஐந்து படங்கள் வரை கதாநாயகனாக நடித்துவிட்டு இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்தால் என்ன ஆகும் என்று யோசித்தேன். ஆனால் கமலஹாசன் இந்த படத்தில் நீங்கள் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அதேபோல அந்த படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்று நெப்போலியன் கூறியிருந்தார். அந்த படம் தான் விருமாண்டி.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top