Connect with us

69 வயதிலும் குதிரை போல் நிக்காமல் ஓடும் கமல்.. ‘கல்கி’ படத்தில் வெறும் 3 நாட்களில் நடிக்க வாங்கிய சம்பளம்..

CINEMA

69 வயதிலும் குதிரை போல் நிக்காமல் ஓடும் கமல்.. ‘கல்கி’ படத்தில் வெறும் 3 நாட்களில் நடிக்க வாங்கிய சம்பளம்..

 

நடிகர் கமலஹாசன் கல்கி திரைப்படத்தில் மூன்று நாள் நடிப்பதற்கு ஒரு நாளைக்கு 10 கோடி வீதம் 3 நாளைக்கு 30 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். இதை கேட்டு பலரும் ஆச்சரியத்தில் வாய் அடைத்து போய் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அனைவராலும் பாராட்டப்பட கூடிய ஒரு நடிகர் என்றால் கமலஹாசன் தான். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படும் இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனர், கதையாசிரியர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்கலைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

   

இதற்கு இடையில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அதற்கான பிரமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். கமலஹாசன் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரியும். தனது எட்டு வயதில் கேமரா முன் நின்று நடிக்க தொடங்கிய இவர் தற்போது வரை 233 திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான்.

அவருக்கு அடுத்ததாக கமலஹாசன் அந்த இடத்தில் இருக்கின்றார். கமலஹாசனை சினிமா பல்கலைக்கழகம் என்று கூறலாம். அந்த அளவிற்கு சினிமாவில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் கற்று வைத்து ஜொலித்து வருகின்றார். பெரிய அளவில் டெக்னாலஜி வளராத காலகட்டத்தில் கூட பல டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவில் புகுத்தி மாற்றம் கண்டவர். அப்படிப்பட்ட கமலஹாசன் சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

பின்னர் விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ரிஎன்ட்ரி கொடுத்த இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்த வருகின்றார். சமீபத்தில் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்ற முடிந்தது விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

அடுத்ததாக கேரளாவிலும் இப்படத்தின் சூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் கல்கி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் அவர் மூன்று நாட்கள் நடிப்பதற்கு 30 கோடி சம்பளம் வாங்கி இருக்கின்றாராம். இப்படி சினிமாவில் தற்போது மிக பிஸியாக கமலஹாசன் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக ஏகப்பட்ட திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றார். இதைப் பார்த்த பலரும் பழைய பார்முக்கு திரும்பிட்டாரு போல கமலஹாசன் என்று கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top