பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமலஹாசன் மாரிமுத்துவை அழைத்து பாராட்டியதை அவர் பேட்டியில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் மறைந்த நடிகர் மாரிமுத்து. இவரின் மறைவு இன்றளவும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கின்றது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து அசத்தி வந்த இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

பின்னர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பல படங்களில் நடித்தாலும் பரியேறும் பெருமாள் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. ஆதிக்க ஜாதி மனநிலையை கொண்ட ஸ்ரீராம் என்ற கதாபாத்திரத்தில் நடிகை கயல் ஆனந்தியின் தந்தையாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கமலஹாசன் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜை நேரில் வரச் சொல்லி பாராட்டி இருந்தார். அவர்களிடம் இது போன்ற முயற்சிகளை கைவிடாதீர்கள். என் நண்பர்கள் பலரும் போன் செய்து பரியேறும் பெருமாள் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று கூறினார்கள் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அந்த படத்தை பார்த்தேன். மிக அருமையான முயற்சி இந்த முயற்சியை கைவிடாதீர்கள் என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் யார் என்று கமலஹாசன் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜிடம் கேட்டிருக்கின்றார். அப்போது மாரி செல்வராஜ் அவர் ஒரு இயக்குனர் தற்போது நடித்தும் வருகிறார் என்று கூற அவரை அழைக்கவா என்று மாறி செல்வராஜ் கூறி இருக்கின்றார். அதனை தொடர்ந்து மாரிமுத்துவுக்கு போன் செய்து ராஜ்கமல் நிறுவனத்திற்கு வர சொல்லி இருக்கின்றார் மாரி செல்வராஜ்.

உடனே அங்கு சென்ற மாரிமுத்து கமலஹாசனிடம் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றார். அந்த அப்பா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள் என்று மனதார கமலஹாசன் பாராட்டி இருக்கின்றார். இதைத்தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தில் நடித்தபோதும் அந்த சந்திப்பை மீண்டும் நினைவுகூர்ந்ததாக ஒரு பேட்டியில் மாரிமுத்து பேசிய வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சிறந்த நடிகராக இருந்த மாரிமுத்துவின் மறைவு சினிமாவில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.
