1995 ஆம் வருட முதல் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி நடிகை அபிராமி 5 வருடங்கள் கழித்து அர்ஜுன் நடித்த வானவில் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்., அதன் பிறகு தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு முக்கியமான படம் அமைந்தது விருமாண்டி. கமல் எழுதி, இயக்கி தயாரித்த திரைப்படம் தான் இது. இந்த படத்தில் அன்னலட்சுமி என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்த படம் முழுக்க அபிராமியை சுற்றி வருவது போல தான் எழுதியிருந்தார். படத்தி லிப் லாக் கொடுக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது. மேலும் இந்த படத்தில் வரும் “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல” என்ற பாடல் நல்ல ஒரு மெலடி சாங் ஆக இருக்கும். இந்த படத்திற்கு பிறகு 36 வயதினிலே, மாறா, சுல்தான், மகாராஜா, வேட்டையன் உள்ளிட்ட சில படங்களில் அபிராமி நடித்திருக்கிறார்.

இப்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி, ஒரு முக்கியமான தகவலை கூறியுள்ளார். அதாவது “விருமாண்டி படம் உருவானபோது நான் அமெரிக்காவில் சைக்காலஜி கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். இங்கிருந்து பிரபலமான ஒருவரிடம் சுபாரிசு கடிதம் தேவைப்பட்டது.

எனவே கமல் சாரிடம் சென்று சிபாரிசு கடிதம் கேட்டேன். ஆனால் தர முடியாது என்று சொல்லிவிட்டு சினிமாவை விட்டு நீ போகக்கூடாது. உனக்கு இங்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் விருமாண்டி படத்தில் நடித்த முடித்த பிறகு எனக்கு மீண்டும் அட்மிஷன் கிடைத்தது. அதனால் படிக்க சென்று விட்டேன். ஏனெனில் அது என்ன பல நாள் கனவு” என்று சொல்லியுள்ளார்.
