டைட்டில் ஜெயிச்ச என்ன கூத்தாடின்னு சொல்றாங்க.. ஆனா சிவகார்த்திகேயனை.. KPY பிரபலம் வெங்கடேஷ் எமோஷனல்..!

Spread the love

பொதுவாகவே சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றால் அதனை தொடர்ந்து அதே போல அடுத்தடுத்த சேனல்களில் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும். அதுபோல அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். அதன்படி கலக்கப்போவது யாரு இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட வெங்கடேஷ் இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், அனைவருக்கும் என்னை தொலைக்காட்சி மூலமாகத்தான் தெரியும்.

நாங்க காமெடி பாய்ஸ் என்ற ஸ்டேஜ் காமெடி செய்து கொண்டிருந்தோம். அதன் மூலமாகத்தான் ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பயணம் ஆரம்பித்தது. ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டதே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். கலக்கப்போவது யாரு சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்றேன். அப்போது எனக்கு வெறும் சாக்லேட் பேக் மட்டும் தான் பரிசாக கிடைத்தது. ஆனா அந்த நிகழ்ச்சி மூலமாக தான் நான் நல்லா ரெஜிஸ்டர் ஆனேன். விஜய் டிவியில் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் பங்கு பெரிய அளவில் உள்ளது. விஜய் டிவியில் இருந்து பலரும் பெரிய இடத்திற்கு வந்துள்ளனர்.

எனக்கு அடுத்த சீசனில் தான் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு பரிசு தொகை கிடைத்தது. பின்னர் நான் விளம்பரத்திற்கு போய் விட்டேன். விளம்பரத்தில் பிஸியாக வளம் வருவதால் என்னால் சினிமாவில் நடிக்க தனியாக நேரம் செலவிட முடியவில்லை. அது மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடித்து நான் இரண்டு நேஷனல் அவார்ட் வாங்கியுள்ளேன். கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே நான் இந்த துறையில் பயணிக்கின்றேன்.

ஆனாலும் என்னுடைய நண்பர்கள் பலர் இவங்க தான் பிஸியா இருக்காங்களே இவங்களை கூப்பிட்டா அதிக சம்பளம் கேட்பாங்க என்று என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதன் காரணமாகவே எனக்கு சினிமாவில் அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மக்கள் எதுவுமே தெரியாமல் நீ எல்லாம் கூத்தாடி பையன் தானே என்று டக்குனு பேசிடுவாங்க. அவர்களைப் பற்றி என்னென்ன தெரியாம பேசுவாங்க. ஆனால் நான் ஒரு வார்த்தை விடுறதுக்கு அவ்வளவு யோசிப்பேன் என்று வெங்கடேஷ் எமோஷனலாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

4 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

14 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

24 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

34 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

44 minutes ago

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

56 minutes ago