தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் ரஜினி மற்றும் கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்னும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு ஸ்டைல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர். இவர் தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை டர்ட்டி பிக்சர் என்று படமாக எடுத்துள்ளார்கள்.
இப்படி இருந்தும் இவருடைய வாழ்க்கையில் எவ்வளவு சொல்லப்படாத விஷயங்கள் மர்மமாக இன்றும் உள்ளது. 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி இவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் காதல் தோல்வி, குடிப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் இந்தியா முழுவதும் ஒரு பெரிய காட்டு தீ போல பரவியது. இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படியான நிலையில் சில்க் ஸ்மிதா பற்றி பிரபல நடிகை ஷர்மிலி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், சில்க் ஸ்மிதாவை நான் எப்போதும் அக்கா என்று தான் கூப்பிடுவேன். கவர்ச்சி உடையில் நடிக்க எல்லா பெண்களுக்குமே தயக்கம் இருக்கும். எனக்கும் அந்த தயக்கம் இருந்தது. நான் ஒரு நாள் அவரிடம் அரைகுறை டிரஸ் போட்டுக்கிட்டு ஆடுவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவங்க இழுத்துப் போத்திக்கிட்டு நடிக்க எனக்கும்தான் ஆசை. ஆனா மூடிட்டு நடிச்சா எவண்டி பாப்பா என மிகவும் உருக்கமாக கேட்டார்.
அவருக்கு அரைகுறை ஆடையில் நடக்க துணி கூட விருப்பமில்லை. ஆனால் குடும்ப வறுமைக்காக அவர் அப்படி நடித்தார். அவருக்கு பட்டுப்புடவை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் சூட்டிங் இல்லாத நேரங்களில் வீட்டில் பட்டுப் புடவையைக் கட்டி தலை நிறைய பூ வைத்துக்கொண்டு நகைகளை எல்லாம் அணிந்து கொண்டு முழு நேரமும் அப்படியேதான் இருப்பார். அதனை அவரே என்னிடம் கூறியுள்ளார் என்ற ஷர்மிலி கூறியுள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…