இந்தியா முழுவதுக்கும் நடனப்புயல் என்றாலே பிரபுதேவாவின் பெயர்தான் நமக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தனது மின்னல் வேக நடனத்தால் ரசிகர்களைக் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டிப் போட்டு வைத்திருப்பவர். நடன இயக்குனராக அறிமுகமான இவர் நடிகராக பரிணமித்த அவர் பின்னர் இயக்குனராகவும் வெற்றிகரமாக வலம் வந்தார்.
இயக்குனராக போக்கிரி, வில்லு போன்ற படங்களை இயக்கிய அவர், பின்னர் சல்மான் கானை வைத்து வாண்டட் ஆகிய படங்களை இயக்கி பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். ஆனால் கடைசியாக வெளியான சில படங்கள் வெற்றி பெறாததால் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நடிகராகவே திரும்பியுள்ளார்.
ஆனாலும் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. இந்நிலையில் பிரபுதேவா நடிகராகவே இப்போது அஜித், விஜய் ஆகியோர் இருக்கும் இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர், ஆனால் அவர் எடுத்த சில தவறான முடிவுகளேக் காரணம் என சொல்லப்படுகிறது.
அத்தகைய ஒரு சம்பவம பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “இயக்குனர் சசி என்னிடம்தான் வந்து சொல்லாமலே படத்தின் கதையை சொன்னார். நான் எனக்குக் கதை பிடித்ததால் சம்மதம் சொல்லி பிரபுதேவாவிடம் போய் கதை சொல்ல சொன்னேன். அவரும் சொல்ல பிரபுதேவாவும் நடிக்க சம்மதம் சொன்னார்.
அதையடுத்து சசி பட வேலைகளைத் தொடங்கினார். அப்போது அவர் ஒரு போஸ்டர் தயார் செய்தார். அதில் அவரின் பெயரை முதலில் போட்டுக் கொண்டார். இது பிரபுதேவாவுக்கு பிடிக்கவில்லை அதனால் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். நான் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பிரபுதேவா கேட்கவில்லை.
என்னிடம் ‘முதல் படத்திலேயே இவ்ளோ திமிரா நடந்துக்குறான்னா, அவன் சரிவர மாட்டான் சார்” என சொல்லிவிட்டு போய்விட்டார்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு சொல்லாமலே திரைப்படம் லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.