“இனி ரூ.1000 இல்ல, ரூ.2000″…. மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் தரப்போகும் ‘மெகா’ சர்ப்ரைஸ்…!

By Nanthini on தை 24, 2026

Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தொடரில் இன்று, தனியார் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான திருத்தச் சட்ட மசோதா மற்றும் பிச்சை எடுப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட 5 முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. குறிப்பாக, பள்ளிக் கட்டணங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிர்ணயம் செய்யவும், விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த புதிய திருத்தம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமூக நலனை மேம்படுத்தும் வகையில் பிச்சை எடுப்பதைத் தடுப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான சட்ட வரைவுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தக் கூட்டத்தொடரின் மற்றொரு முக்கிய எதிர்பார்ப்பாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு உள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ. 1,000-த்தை ரூ. 1,500 அல்லது ரூ. 2,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இந்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் முறைப்படி வெளியிடுவார் என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தவிர, பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் இத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.