Categories: சினிமா

உயிர் போகும் நிலையிலும் தந்தையின் மனதில் இருந்த ஆசை.. 9 ஆண்டுகள் கழித்து நினைவாக்கிய மறைந்த நடிகர் கலாபவன் மணியின் மகள்..!

Spread the love

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் தான் கலாபவன் மணி. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தன்னுடைய கெரியரை மிமிக்ரி ஆர்கெஸ்ட்ராக ஆரம்பித்தார். கொச்சின் கலாபவன் என்ற நாடக குழுவில் தன்னுடைய தனித்துவமான திறமையை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்த இவருக்கு அக்ஷரம் என்ற திரைப்படம் மூலமாக மலையாள திரையுலக கதவு திறந்தது. அந்தப் படத்தில் ரிக்ஷா டிரைவராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் கேப்டன் பிரபாகரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில் வளர்ந்த பிறகு மறுமலர்ச்சி என்ற திரைப்படம் மூலமாக தான் தமிழில் நடிகராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் பல திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். முதலில் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட பிறகு அவருடைய மரணத்தில் சந்தேகம் இருந்தது. உடற்கூறு ஆய்வில் அவருடைய உடலில் காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. பிறகு இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அவர் தொடர்ந்து அதிக அளவு பீர் குடித்து வந்ததால் கல்லீரல் பாதிப்பு இருந்து அவர் தொடர்ந்து குடித்த காரணத்தால் தன்னுடைய மரணத்தை அவரே தேடிக் கொண்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. கலாபவன் மணி மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை தாண்டி அவருடைய குடும்பத்தையும் அதிகம் பாதித்தது. கலாபவன் மணிக்கே திருமணம் முடிந்து ஒரு மகள் உள்ள நிலையில் அவருடைய மறைவுக்குப் பிறகு அவர் கட்டிய வீட்டில் மனைவி மற்றும் மகள் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு எர்ணாகுளத்திற்கு கலாபவன் மணியின் மகள் ஸ்ரீ லட்சுமி தன் அம்மாவுடன் குடிப்பெயர்ந்தார். பிறகு விடுமுறை நாட்களில் மட்டுமே இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனர்.

இப்படியான நிலையில் மணி இறந்த பிறகு அவரது மனைவி மற்றும் மகளை தொடர்பு கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்த போதும் இருவரும் பிரபலத்தில் இருந்து விலகி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இப்படியான நிலையில் மனைவியின் ஒரே மகள் ஸ்ரீ லட்சுமி தற்போது எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயண மருத்துவ அறிவியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கலாபவன் மணி உயிருடன் இருக்கும் போது ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை கட்ட வேண்டும் தன்னுடைய மகளை மருத்துவராக வேண்டும் என்று தனது கனவை பற்றி அடிக்கடி பேசுவார். தந்தையின் இந்த கனவை நினைவாக்கும் விதமாக அவர் மறைந்த பிறகு ஸ்ரீ லட்சுமி மருத்துவராகி இருப்பது தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

6 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

7 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

7 மணத்தியாலங்கள் ago