‘கைதி’ படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த பேபி மோனிகாவா இது…? ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளந்துட்டாங்களே…

By Begam

Published on:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல்  வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் வாரி குவித்தது.

   

இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் வித்தியாசமான கதாபாத்திரத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது கதைக்குறித்து ஒரு தனி முத்திரை பதித்தார்.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதில் வரும் அப்பா -மகள் உறவு கதைக்களத்தை கூறலாம். இந்த உறவு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

கைதி படத்தில்  கார்த்தியின் மகளாக சிறுமி மோனிகா நடித்திருப்பார். இவர் இத்திரைப்படத்தில் மட்டுமின்றி ஏற்கெனவே வெளியான அஜித்தின் வேதாளம், சங்குசக்கரம், பைரவா, ராட்சசன் உள்ளிட்ட பல  திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் கைதி  இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த பேபி மோனிகாவா இது…?’ என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.