தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்து சென்றாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் குணால். மாடலிங்கில் ஒரு சில விளம்பரத்தில் நடித்த இவருக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் 1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்வை ஒன்றே போதும், புன்னகை தேசம், வருஷமெல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே, எங்கே என் கவிதை மற்றும் உணர்வுகள் என அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மீண்டும் மும்பைக்குச் சென்று ஹீரோவாக வாய்ப்பு தேடினார். ஆனால் அதுவும் நடக்காமல் போக உதவி எடிட்டர் ஆகவும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு அனுராதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அனுராதா பிரிந்து விட குணால் தனிமையில் வாழ்ந்து வந்தார். இப்படியான நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர் இந்த துயர முடிவை எடுத்த போது அவரின் காதலியான நவீனா அதே அறையில் இருந்ததால் இதனை கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் என்று குணாளின் தந்தை வழக்கு பதிவு செய்தார். ஆனால் குணால் இறந்த நேரத்தில் தான் குளியல் அறையில் குடித்துக் கொண்டிருந்ததாகவும் அந்த நேரத்தில் குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நவீன வாக்குமூலம் அளித்திருந்தார். பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. நடிகை நவீனா இந்தி படம் ஒன்றை தயாரிக்க இருந்ததாகவும் அதில் குணாலை ஹீரோவாக நடிக்க இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் குணால் மனைவி அனுராதா பிரிந்து சென்று விட்டார் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிம்ரனின் தங்கையான மோனல் குணாலை காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மோனல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் கழித்து மோனல் எடுத்த அதே தவறான முடிவை குணாலும் எடுத்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். இதுவரை இவருடைய மரணத்திற்கான காரணம் தெரியாமல் மர்மமாகத்தான் உள்ளது.
