ஒரு படம் ஓடுனா திமிரா உனக்கு…? விஷாலை வெளுத்து வாங்கிய காதல் சுகுமார்…! தீயாய் பரவும் வீடியோ…! 

By Begam on ஐப்பசி 8, 2023

Spread the love

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காதல்’. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண் கலங்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் காமெடி நடிகர் சுகமாரின் நடிப்பு நல்ல வரவேற்பு பெற்றது. மதுரையை சேர்ந்த சுகுமார் காதல் படத்தை தவிர வேறு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார் .

   

ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை.  நடிகர் காதல் சுகுமாரை நமக்கு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு சில படங்களை இயக்குனராக இயக்கியும் உள்ளார். இது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆம் இவர் இயக்குனராக மாறி சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இத்திரைப்படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார் நடிகர் காதல் சுகுமார்.

   

 

தற்பொழுது இவர் டப்பாங்குத்து என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் பேசிய அவர், நடிகர் விஷாலை மிகவும் காட்டமாக தாக்கி பேசியுள்ளார். ‘2, 3 கோடி மட்டும் வைச்சிருந்தா படம் எடுக்க வராதீங்க. டெபாசிட் பண்ணிட்டு 2, 3 வருஷம் கழிச்சு வாங்க என விஷால் கூறியதாக கூறிய அவர், அப்படின்னா அவுங்களுக்கு சோறு நீங்க போடுவீர்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். இதுபோல பல்வேறு கேள்விகளை எழுப்பி விஷாலை கிழித்து தொங்க விட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…