1992ஆம் ஆண்டு ‘ஆவாரம்பூ’ என்ற படத்தில் ‘சக்கரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் வினீத். இந்த சக்கரை கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். நடிகர் வினீத் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் கண்ணூரில் ஒரு பிரபலமான குடும்பம் ஆகும். அப்பா கே.டி ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர். அம்மா சாந்தகுமாரி ஒரு டாக்டர் ஆவார். நாட்டியப் பேரொளி ‘பத்மினி’ வினித்திற்கு சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கேற்றார் போலவே வினித் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவராக வளர்ந்தவர் .
கேரளாவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் இளைஞர் விழாவில் கலந்துகொண்டு நாட்டியம் ஆடி விருதினை வென்றுள்ளார் நடிகர் வினீத். சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி படத்தில் நடித்த வினீத் செம்மயாக பரதநாட்டியம் ஆடியிருப்பார். 1984ஆம் ஆண்டு ‘இடனிலங்கள்’ என்ற மலையாள படத்தில் திரையுலகில் அறிமுகம் ஆனார். தமிழில் 1992ஆம் ‘ஆவாரம்பூ’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினை பெற்றார் வினீத். அதன்பின்னர், ஜெண்டில் மேன், ஜாதி மல்லி, மே மாதம், காதல் தேசம் ,சக்தி பண்ற பல திரைப்படங்களில் ஹீரோவாக அசத்தினார். காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து அசத்தினார் வினித். மேலும் 100கும் மேற்ப்பட்ட படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராகவும் செயல்பட்டுள்ளார்.


