தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிக பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இளையாராஜாவின் பாடல்கள் எளிமையும் ஆழமும் கொண்டவை. ஆனால் வரிகள் எல்லாம் மிகவும் எளிமையாக இருக்கும். அதுதான் அவருடைய இசையின் பலம் மற்றும் பலவீனம் என்று சொல்லப்படுகிறது. வைரமுத்து உடனான பிரிவுக்குப் பிறகு இளையராஜா வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனது இசைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இளையராஜா உடன் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைப் பாடல் ஆசிரியர் கபிலன் பகிர்ந்துள்ளார். அதில் “ராஜா சார் ட்யூன் என்றால் ட்யூன்தான். அதுக்குள்தான் எழுத வேண்டும். அவரிடம் அரச்சொல் கூடாது, கவிதைத் தனமாக எழுதக் கூடாது.’ என்று சொல்வார்.
என்னிடம் “யோவ், நான் பாமரன்யா, எனக்கேத்த மாதிரி எழுது. இந்த கவித்துவம் எல்லாம் கமல்ஹாசன் கிட்ட போய் எழுது. என்கிட்ட வச்சிக்காத.” என சொல்லிவிடுவாராம். கபிலனின் இந்த கருத்து அவர் மீதான விமர்சனங்கள் சரிதானோ என்ற கேள்வி எழுகிறது.