விஜயின் காவலன் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

By Nanthini on பங்குனி 25, 2025

Spread the love

தமிழில் விஜய் மற்றும் அசின் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படத்தில் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை மித்ரா குரியன். இவர் 1989 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து பிறகு தனது திரை பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார். நயன்தாராவை நெருங்கிய உறவினரான இவர் முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் அவருடன் ஒரு திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

இந்த காவலன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ அடையாளமே தெரியலையே! - மனிதன்

   

பிறகு மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வந்த நிலையில் பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். பின்னர் தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்தார். பிறகு சூரியன் சட்டக்கல்லூரி மற்றும் காவலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

இந்த காவலன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ அடையாளமே தெரியலையே! - மனிதன்

 

மலையாள படங்களிலும் அடிக்கடி தலைகாட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை. தமிழிலும் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் டிவி ரியாலிட்டி ஷோவிற்கு சில காலம் நடுவராக இருந்து வந்தார். அதனைப் போலவே சீரியலிலும் இவர் நடித்தார்.சன் தொலைக்காட்சியில் அழகு சீரியலிலும் இவர் நடித்திருந்தார்.

இவர் 2005 ஆம் ஆண்டு கொச்சியை சேர்ந்த இசை கலைஞர் வில்லியம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.  இந்நிலையில் மித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர அதனை பார்த்த ரசிகர்கள் காவலன் பட நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.