Connect with us

சான்ஸ் கேட்டு சென்ற MSV-ஐ நிராகரித்த KV மகாதேவன்.. ஆனாலும் அதுக்கப்புறம் செஞ்சதுதான் ஹைலைட்டே..

CINEMA

சான்ஸ் கேட்டு சென்ற MSV-ஐ நிராகரித்த KV மகாதேவன்.. ஆனாலும் அதுக்கப்புறம் செஞ்சதுதான் ஹைலைட்டே..

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம் எஸ் விஸ்வநாதன். இருவரின் படங்களுக்கும் முத்து முத்தான பாடல்களைக் கொடுத்த அவர் 80 களின் இறுதிவரை இசையமைத்தார். தன்னுடைய கேரியரில் ஒட்டுமொத்தமாக 1000 படங்களை நெருங்கி இசையமைத்துள்ளார்.

முதலில் நடிக்கவேண்டும் என்ற ஆசையோடு கேரளாவில் இருந்து தமிழகம் வந்த ஜூபிடர் பிக்சர்ஸில் கேண்டின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். ஆனால் பாடவேண்டும் என்ற ஆசையோடு அப்போது உச்சத்தில் இருந்த கே வி மகாதேவனிடம் சென்று கோரஸ் பாடும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார் கே வி மகாதேவன்.

இதைப் பற்றி பல ஆண்டுகள் கழித்து எம் எஸ் விஸ்வநாதன் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ” கே வி மகாதேவன் மாமா ரொம்பப் பெரிய மேதைங்க. நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா… அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம்.

   

முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, ‘ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான்.

 

நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகாதேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!” எனக் கூறியுள்ளார். அதன் பின்னர்தான் எம் எஸ் விஸ்வநாதனுக்கு இசையமைப்பாளராகும் வாய்ப்புக் கிடைத்து புகழின் உச்சிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top