தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.
இயக்குனர் விக்ரமனிடம் அஸோசியேட் இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். அதற்கு முன்பே அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். விக்ரமன் இயக்கிய புதுவசந்தம் திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதில் பணியாற்றிய கே எஸ் ரவிக்குமாருக்கு ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி.

#image_title
அதில் தொடங்கிய கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்த இவர் இயக்கத்தில் இன்றுள்ள பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆளுமை எப்படி உருவானது என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் “நான் இயக்குனர் ஆனபின்னர் இப்படி மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் ஆளுமையாக உருவாகவில்லை. நான் உதவி இயக்குனராக இருந்தபோதே எல்லோரையும் கண்ட்ரோல் பண்ணக் கூடியவனாக இருந்தேன். என்னுடைய இயக்குனர்கள் என்னுடைய மைக்ரோபோனைக் கொடுத்துவிட்டு கூட்டத்தை என்னைக் கண்ட்ரோல் செய்ய சொல்வார்கள். அதனால் எனக்கு அப்போதே அந்த திறமை இருந்ததாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
