ஷூட்டிங்குக்கு லேட்டா வந்து அலம்பல் பண்ணிய சிம்பு… ஒரே வார்த்தையில் பெட்டி பாம்பாய் அடக்கிய KS ரவிக்குமார்!

By vinoth on மே 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவின் குற்றச்சாட்டு வைத்து  அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்றது. இன்னும் அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

   

அதே சமயத்தில் அவரது உடல் எடையும் அதிகரித்திருந்தது. இதனால் சிம்பு சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்றே பேச்சுக்கள் அடிபட்டன. எனினும் அதன் பின் தனது உடலை கட்டுக்குள் கொண்டு வந்து “ஈஸ்வரன்”, “மாநாடு” போன்ற திரைப்படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அவர் என்னதான் ரீ என்ட்ரி கொடுத்தாலும் அவரை பிரச்சனைகள் விட்டபாடு இல்லை.

   

#image_title

 

இந்நிலையில் சிம்புவை வைத்து சரவணா படத்தை இயக்கிய கே எஸ் ரவிக்குமாரிடமும் சிம்பு இதே போல தாமதமாக வந்து ஷூட்டிங்கில் பிரச்சனை பண்ணியுள்ளார். வேகத்துக்கு பேர்போன கே எஸ் ரவிக்குமார் அதனால் கடுப்பாகி சிம்புவை தன் வழிக்குக் கொண்டு வந்த சம்பவத்தை அவரே ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

அதில் “சிம்பு தொடக்கத்தில் சில நாட்கள் லேட்டாக வந்தார். நானும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு கோபம் வந்துவிட்டது. சிம்புவை அழைத்து நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். என்னால் உன் இஷ்டத்துக்கு எல்லாம் ஷூட் செய்ய முடியாது. மறுநாள் லேட்டாக வருவாய் என்றால் அதை முதல் நாளே சொல்லிவிட்டு போகனும். அப்படி சொன்னால் நான் அதற்கேற்ற மாதிரி ஷூட்டிங் ப்ளான் பண்ணிப்பேன். நீ இப்படி பண்ணா சரிவராது என்றேன். அதைக்கேட்டு அதிர்ச்சியான அவர் “இனிமேல் ஒழுங்கா வர்றேன் சார்” என்றார். அதுபோல ஒழுங்காக வந்து நடித்தும் கொடுத்தார்” எனக் கூறியுள்ளார்.