ஆந்திர தேசத்தில் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் பலர். அப்படி ஒருவர்தான் என் டி ஆரின் மகன் பாலகிருஷ்ணா. சூப்பர் மேன் பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் கூட செய்ய முடியாத ஆக்ஷன் காட்சிகளை எல்லாம் நடித்து தமிழ்நாட்டில் அதிக ட்ரோலுக்கு ஆளானவர் பாலகிருஷ்ணா.
அதே போல அவர் பொது இடங்களில் கலந்துகொள்ளும் போது செய்யும் சேட்டைகளும் விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்தித்துள்ளன. சமீபத்தில் கூட கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலையா அஞ்சலியை மேடையில் தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதன் பிறகு அஞ்சலில் அவரைப் பற்றி புகழ்ந்து பதிவு செய்து அந்த விமர்சனங்களை மடைமாற்றினார்.
இந்நிலையில் பாலையா உண்மையில் எப்படிப்பட்டவர் என்பது பற்றி சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “பாலையா மிகவும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர். அவர் தனக்கென்றே ஒரு தனி ஜோதிடரை வைத்துள்ளார். அவர் குறித்துக் கொடுக்கும் நேரத்தில்தான் வெளியில் கிளம்புவார். அவர் சொல்லும் ஆடைகளைதான் அணிவார்.
அதே போல தன்னிடம் யாராவது கதை சொல்ல வந்தால் கூட, அவர்கள் வீட்டில் இருந்து இத்தனை மணிக்குதான் கிளம்ப வேண்டும், இத்தனை மணிக்குதான் தன்னை வந்து பார்க்கவேண்டும் என்றெல்லாம் கண்டீஷன் உண்டாம். இத்தனைக் கண்டீஷன்களையும் சகித்துக் கொண்டுதான் அவரோடு படம் பண்ண முடியுமாம்.

இந்நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவரோடு பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “ ஒருநாள் செட்டில் ஃபேன் வேகமாக ஓடி அவரின் விக் கலைந்துவிட்டது. இதைப் பார்த்த என் உதவி இயக்குனர் சரவணன் சிரித்துவிட்டான். அதைப் பார்த்து அவர் கோபமாகி அவனை அடிக்கப் போய்விட்டார்.
நான் அவரிடம் அவன் என் உதவி இயக்குனர்தான் என சொன்னபோதும் அவர் நம்பவில்லை. இல்லை இல்லை அவன் என் எதிர்களுடைய ஆள் எனக் கோபமாக இருந்தார். அப்புறம் எப்படியோ அவரை சமாதானப்படுத்தினேன். அவர் எப்போதுமே எல்லோரையும் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்” எனக் கூறியுள்ளார்.
