Categories: சினிமா

அந்த எதிர்மறைக் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனே ஜெயலலிதான்… ஆனா அது தெரியாம அவரே பாராட்டுனாரு – பிரபல இயக்குனர்!

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுத்துள்ளார். கடைசியாக அவர் இயக்கிய லிங்கா உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்ததால் இப்போது நடிகராக மட்டும் பணியாற்றி வருகிறார்.

புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவிகுமார் தொடர்ந்து கமர்ஷியல் ரீதியான படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார். இதனால் 90 களில் தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருந்த ரஜினி, கமல் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து இயக்கி சில்வர் ஜூப்ளி படங்களாகக் கொடுத்தார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘படையப்பா’. அந்த படத்தில் நீலாம்பரி என்ற திமிர் பிடித்த கொடூரமான நீலாம்பரி என்ற வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து ரஜினிக்கு நிகராக பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் படம் ரிலீஸாகி பல ஆண்டுகள் கழித்து அந்த கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார். ஒரு நேர்காணலில் “நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனே ஜெயலலிதா மேம்தான். ஆனால் அது அவருக்கேத் தெரியாது. படம் பார்த்துவிட்டு அவர் பாராட்டினார். நீலாம்பரி கேரக்டர் ஹைலைட்டா இருக்குன்னு சொன்னாங்க” எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியல் சம்மந்தமாக அப்போது சில கருத்துகளை சொல்லி வந்தார். அப்போது ஜெயலலிதாவின் ஆட்சியையும் காட்டமாக விமர்சித்தார். இதனால் ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் இடையே ஒரு மோதல் போக்கு நிலவியது. அவரைத் தாக்கிதான் ரஜினிகாந்த் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் வைக்கப்பட்டதாகவும் அப்போதே கிசுகிசுக்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago