நடிகைகளை வைத்து அப்படி எடுக்கிறார்கள், ஆனால்…… பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் கே.ராஜனின் பேச்சு

By Deepika

Published on:

 

காலம் காலமாக திரைப்படங்களில் விலங்குகளை நடிக்க வைப்பது என்பது நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பாம்பு, நாய், குரங்கு, மாடு, யானை போன்ற விலங்குகளை பிரதானமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளன. அப்படி படம் எடுத்தவர்களில் முதன்மையானவர்கள் சாண்டோ சின்னப்பத்தேவர் மற்றும் இராமநாராயணன்.

   
Clever pressmeet

நடிகர்களுடன் இணைந்து இந்த விலங்குகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும். அப்படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். ஆனால் இப்போது அப்படிப்பட்ட படங்கள் எல்லாம் வருவதில்லை. அந்தவகையில் சமீபத்தில், இரண்டு நாய்களை மட்டுமே வைத்து ஒரு முழு நீள படம் ஒன்று வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ளது.

clever dog

கார்த்திகேயன் பிரதர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் இப்படத்தை தயாரிக்க படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியன். இப்படத்திற்கு ‘கிளவர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

K raja speech in clever pressmeet

அவர் கூறுகையில், கிளவர் என கிளவராக எடுத்துள்ளார்கள். நடிகைகளை வைத்து தேவையில்லாமல் எடுக்கிறார்கள், அது தோல்வியை தழுவுகிறது, அனால் இந்தப்படத்தில் இரண்டு நாய்கள் நடித்துள்ளனர் அவ்வளவு அழகாக நடித்துள்ளனர். இந்தப்படம் நிச்சயம் பிரமாதமாக வரும், ஆனால் ஓடிடி-யில் வெளியாகும் போது அதன் வெற்றி உங்களுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

author avatar
Deepika