என்னது உனக்கு இவ்ளோ சம்பளமா…? நான்லாம் அதக் கண்ணால பாத்ததேயில்லடா- கே எஸ் ரவிக்குமாரிடம் சொன்ன பாலச்சந்தர்!

By vinoth on ஆவணி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு பெரும் துருவங்களை மாறி மாறி இயக்கி 90 களிலும் 2000களிலும் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் இயக்குனராக வலம்வந்தவர் கே எஸ் ரவிக்குமார்.

கே எஸ் ரவிக்குமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். விக்ரமன் இயக்கிய புது வசந்தம் படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய அவரின், வேலை திறன் பிடித்திருந்ததால் புரியாத புதிர் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி அவருக்கு அளித்தார். அந்த பட வாய்ப்பு அவருக்குக் கிடைக்க இயக்குனர் விக்ரமனும் ஒரு முக்கியக் காரணம்.

   

புரியாத புதிர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் அடுத்தடுத்து அவர் படங்களை இயக்கினார். அதில் சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்யம் போன்ற படங்கள் ஹிட்டாகி, அவரை கவனிக்கப்படும் இயக்குனராக்கின.

   

இதையடுத்துதான் அவருக்கு ரஜினியின் முத்து படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படத்தின் போது “ரஜினி சார் என்னை அழைத்து நீங்க எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க எனக் கேட்டார். நான் 12 லட்சம் வாங்குறேன் என சொன்னேன். அவர் அப்ப இந்த படத்துக்கு 15 லட்சம் வாங்கிக்குங்க என்றார். நானும் சரி என்றேன்.

 

அந்த படத்தின் தயாரிப்பாளராக கே பாலச்சந்தர் என்னை அழைத்து என்னடா உனக்கு சம்பளம் 15 லட்சம்னு ரஜினி போட்ருக்கான். எத்தன படம்டா பண்ணிருக்க என்றார். நான் 12 படம் பண்ணிருக்கேன் சார் என்றேன். அடப்பாவி நான்லாம் அவ்ளோ பணத்த கண்ணால பாத்ததே இல்லடா. நான் அதிகமாக வாங்குன சம்பளமே 5 லட்சம்தாண்டா என்றார்.

சார் நான் வாங்குற சம்பளத்த சொன்னேன். அவர் அப்படி போட்ருக்கார். நீங்க கொடுக்குறத கொடுங்க என்றேன். அவர் ‘அப்படி இல்லடா ரஜினி சொல்லிட்டான். அதனால் அதையேக் குடுத்துட்றேன்” என சொல்லி அதே சம்பளத்தைக் கொடுத்தார் என கே எஸ் ரவிக்குமார்  பகிர்ந்துள்ளார்.