வடநாட்டில் பிறந்து தமிழ்நாட்டின் மருமகளானவர் ஜோதிகா. வாலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பாரில் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதை தொடர்ந்து குஷி படம் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் ஜோதிகா. பல படங்களில் நடித்த ஜோதிகா அஜித், சூர்யா, விஜய், கமல், ரஜினி என அனைத்து ஸ்டார் நடிகர்களுடனும் நடித்தார்.

Suriya and jyothika
சந்திரமுகி, மொழி இரண்டு படமும் இவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தன்னுடைய முதல் அப்படத்தின் ஹீரோவான சூர்யாவை காதலித்து கரம் பிடித்தார் ஜோதிகா. திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் செட்டிலான ஜோதிகா, சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிட்டார். இவருக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறு வருடங்களுக்கு பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

Ajay devgn and jyotika in shaitaan
பெண்களை மையமாக வைத்து உருவான பல நல்ல படங்களில் நடித்து மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார் ஜோதிகா. சமீபத்தில் கூட காதல் தி கோர் என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இப்போது 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி சினிமாவில் நுழைந்துள்ளார் ஜோதிகா. சைத்தான் என்ற படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளார். மகளை ஹிப்னடைஸ் செய்து அழைத்து போகும் அரக்கனிடம் இருந்து காப்பாற்றும் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தார்.

Jyotika about national award
இந்தப்படம் சூப்பர்ஹிட்டான நிலையில், அங்குள்ள ஒரு சேனலில் பேட்டி அளித்துள்ளார் ஜோதிகா. அதில் ஒரு வோட்டில் தான் தேசிய விருதை இழந்ததாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மொழி படம் என் கெரியரில் மறக்க முடியாதது. அதில் காது கேக்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருப்பேன். ரொம்ப சேலஞ்சிங்காக இருந்தது. நான் தேசிய விருதுக்கும் நாமினேட் ஆனேன், ஆனால் ஒரு வோட் வித்தியாசத்தில் எனக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் ஜோதிகா.
2007 ஆம் வருடம் வெளியானது மொழி, அதே வருடம் வெளியான படம் தான் பருத்திவீரன். பருத்திவீரன் படத்துக்காக ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.