அடேங்கப்பா..! அந்த ஹிட் படத்தில் சூர்யாவை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்கிய ஜோதிகா….!!

By Soundarya on கார்த்திகை 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் மனைவி ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யா ஜோதிகா மகளாக நடித்த நடிகையா இது! ஆளே  மாறிட்டாங்க!

   

இதனிடையே திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு நீண்ட இடைவெளி விட்ட ஜோதிகா மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளார். தொடர்ந்து சூர்யாவும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகின்றது.

   

காக்க காக்க படத்துக்கு கௌதம் வைக்க ஆசைப்பட்ட பெயர்..! அதுவே செமையா  இருக்குமே!

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்த படமானது நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு  வர இருக்கிறது. இதனையடுத்து இந்த படத்திற்கான ப்ரமோஷன் வேளைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  அடுத்ததாக புறநானூறு படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, காக்க காக்க படம் குறித்து பேசியுள்ளார். அப்போது காக்க காக்க படத்தில் ஜோதிகா என்னை விட மூன்று மடங்கு அதிகமான சம்பளம் வாங்கினார். உண்மையிலேயே நான் என் மனைவியால் சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். கெளதம் மேனனின் இரண்டாம் படம் ‘காக்க காக்க’. இதில் சூர்யா ஜோதிகா இருவரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.