சூர்யா ஜோதிகா தம்பதியை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சூர்யா ஜோதிகா போல் வாழ வேண்டும் என பலர் சொல்லி கேட்டிருப்போம். அந்தளவுக்கு இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆன் ஸ்க்ரீனை விட ஆப் ஸ்க்ரீனில் தான் இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என இவர்கள் நடித்த அனைத்து படமும் ஹிட்.
வட நாட்டு பெண்ணான ஜோதிகா, சூர்யாவை காதலித்து கரம் பிடித்து தமிழ்நாட்டின் மருமகளாக மாறினார். குழந்தைகள் பிறந்த பின் நடிப்பிலிருந்து ஜோதிகா விடைபெற்றார். ஆனால் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஜோதிகா 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதற்கு காரணம் சூர்யா தான் என்றும் ஜோதிகா கூறினார்.
36 வயதினிலே, நாச்சியார், காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என தொடர்ந்து அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா. இந்தநிலையில் 25 வருடங்களுக்கு பிறகு ஷைத்தான் படம் மூலம் மீண்டும் ஹிந்தியில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வரும் ஜோதிகாவிடம் சூர்யா குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது மீண்டும் எப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அசத்தலான பதில் கொடுத்துள்ளார் ஜோதிகா. அவர் கூறுகையில், நானும் அதற்காக தான் காத்திருக்கிறேன். ஆனால் சரியான கதை இன்னும் அமையவில்லை. யாரும் எங்களுக்காக கதை எழுதவில்லை. எங்களை ஆன் ஸ்கிரீனில் விட ஆப் ஸ்க்ரீனில் தான் அதிகம் ரசிக்கிறார்கள் போல. நல்ல கதை வந்தால் உடனே செய்ய தயார் என கூறியுள்ளார் ஜோதிகா.