உச்ச நீதிமன்றத்தில் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சஞ்சய் குமார் அந்த வழக்கிலிருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நீதிபதி பாராட்டியதாகச் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளும் மீம்களும் பரப்பப்பட்டதே இந்த விலகலுக்கான முக்கியக் காரணமாகும்.
முன்பொரு சமயம் தமிழ்நாடு தொடர்பான குற்ற வழக்கு விசாரணையின்போது, “முதல்வர் வேகமாக செயல்பட விரும்புகிறார், ஆனால் நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்கக் கோருகிறீர்கள்?” என்ற பொருளில் தான் பேசியதைச் சமூக வலைதளங்களில் முற்றிலும் மாற்றி, முதல்வர் விஜய்யை நீதிபதி புகழ்ந்ததாகத் தவறாகச் சித்தரித்துவிட்டதாக நீதிபதி சஞ்சய் குமார் பகிரங்கமாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்தத் தவறான தகவல்கள் வெளிநாடுகள் வரை பரவி தனக்குக் குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தார்மீக அடிப்படையில் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைப்பதாக அவர் அறிவித்துள்ள முடிவு தற்போது அரசியல் வட்டாரத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.
