உச்சக்கட்டப் பதற்றம்!… “ஒரே ஒரு ஏவுகணை… நள்ளிரவில் நரகமான பாலம்!”… இன்னும் நிறைய வரப்போகிறது.. ஈரானுக்கு அமெரிக்கா கொடுத்த கடைசி ‘டெட்லைன்’…!!

Spread the love

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய வளைகுடா போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தணிந்தபாடில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியம் பெரும் பதற்றத்தில் உள்ளது. இதன் விளைவாக, உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயு விநியோகம் செய்யும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இந்த விநியோகத் தடையால் சர்வதேச நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.

இந்த மோதலின் உச்சகட்டமாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த, மத்திய கிழக்கின் மிக உயரமான ‘B1’ பாலம் வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 136 மீட்டர் உயரம் கொண்ட இந்த பாலம் ஈரானின் பொறியியல் அதிசயமாகக் கருதப்பட்டு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானை கற்காலத்திற்குக் குண்டுவீசி அழிப்போம்” என்று எச்சரித்திருந்த நிலையில், இந்த முக்கிய பாலம் தகர்க்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முதலில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். பாலம் இடிந்து விழும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க எதிரிகளின் திட்டமிட்ட சதி இதுவென ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “ஈரானின் பிரம்மாண்ட பாலம் இனி பயன்பாட்டிற்கு உதவாது, இது ஆரம்பம்தான்” என எச்சரித்துள்ளார். நிலைமை கைமீறிச் செல்வதற்குள் ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் ராணுவ பலத்தை ஏற்கனவே அமெரிக்கா சிதைத்துவிட்டதாகவும், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அமைதி திரும்புமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Muthu Mani

Recent Posts

உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆறுதல் தேடும் குடும்பம்… இறுதியாக இறங்கி வந்த அரசு… நேரில் சென்று அமைச்சர் கொடுத்த உத்தரவு…!!

கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…

14 minutes ago

ரூ.400 கோடி வசூல் வேட்டை…. மாட்டிய அன்பில் மகேஷ்… மேஜையில் இருந்த 1-வது ஃபைலை தூக்கிய முதலமைச்சர் விஜய்…. அமைச்சர் நிர்மல்குமார் போட்ட குண்டு…..!

தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…

36 minutes ago

ரூ.15 லட்சம் கொடுத்தா தான் சீட்டா?…. தவெக-வில் லீக்கான பகீர் ஆடியோ… குளித்தலையில் நடந்த பரபரப்பு சம்பவம்….!

தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…

40 minutes ago

அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என்.நேரு?… லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி வேட்டை…. திமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…

45 minutes ago

தனுஷுக்கு பின்னால் பாஜக?… டெல்லி ரகசிய சந்திப்பும் ‘காமாட்சி விளக்கு’ சர்ச்சையும்…. கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த தகவல்களும், அவருடைய தற்போதைய நகர்வுகளும் தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.…

49 minutes ago

அதிர்ச்சி… ஜெர்மனியில் புயல் காற்றால் கன்டெய்னர் கப்பல் மீது மோதிய… பிரம்மாண்ட சொகுசுப் படகு… உடைந்த மீட்புப் படகுகள்… நடுங்கவைக்கும் ஷாக்கிங் சம்பவம்…!

பிரேமர்ஹேவன் துறைமுகத்தில் கடுமையான புயல் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, 'மைன் ஷிஃப் 3' என்ற பிரம்மாண்ட சொகுசுப்…

1 மணத்தியாலம் ago