தமிழக சட்டசபை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்த அவருக்கு, விமான நிலையம் முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்திய விஜய், தொண்டர்கள் அன்புடன் வீசிய கட்சித் துண்டுகளைத் தோளில் அணிந்தபடி பொதுமக்களை நோக்கி கையசைத்துச் சென்றார். இருப்பினும், அவரது வாகனத்தைச் சூழ்ந்து தொண்டர்கள் ஆபத்தான முறையில் விரட்டி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த ரோடு ஷோவின் போது எதிர்பாராத விதமாக ஒரு சிறு விபத்து ஏற்பட்டது. விஜய்யின் வாகனத்திற்கு முன்னால் ஸ்கூட்டரில் சென்ற பெண் உள்பட இருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்; அப்போது பின்னால் வந்த போலீஸ் வாகனமும் அவர்கள் மீது உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட விஜய், உடனடியாக தனது பரப்புரை வாகனத்திலிருந்து கீழே இறங்கி ஓடிச் சென்று, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே வேளையில், வேட்புமனு தாக்கலுக்குப் பின் திருச்சி மரக்கடை பகுதியில் அவர் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்திற்காகக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…