“இனி கேஸ் கனெக்ஷன் தேவையில்லை… விலையேற்றத்தில் தவிக்கும் மக்களுக்கு கிடைத்த செம குட் நியூஸ்… வந்தாச்சு மினி சிலிண்டர் ரெடி… மத்திய அரசின் மாஸ் அறிவிப்பு….!!!

By Rajeshwari on சித்திரை 7, 2026

Spread the love

இந்தியாவில் நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, தற்போது ‘மினி எஃப்டிஎல்’ வகை எரிவாயு சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், முறையான எரிவாயு இணைப்பு இல்லாதவர்கள் கூட எவ்வித அலைச்சலுமின்றி நேரடியாக ஏஜென்சிகளில் சென்று சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இதற்கு ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு முறையான அடையாளச் சான்றிதழைச் சமர்ப்பித்தாலே போதுமானது. ஆரம்பக் கட்டணமாக ஒரு சிலிண்டர் ₹1,581-க்கு வழங்கப்படுகிறது; அதன் பிறகு வெறும் ₹600 செலுத்தி 5 கிலோ கேஸை மீண்டும் நிரப்பிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

இந்த மினி சிலிண்டர் திட்டம் குறிப்பாக வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முன்பு முறையான இணைப்பு இல்லாத காரணத்தால், இவர்கள் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்கி வந்த நிலையில், தற்போது அரசின் இந்த நேரடி விற்பனை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

   

இந்நிலையில் ஒரு 5 கிலோ சிலிண்டர் சுமார் 15 முதல் 20 நாட்கள் வரை பயன்பாட்டுக்கு வரும் என்பதால், இது சாமானிய மக்களின் அன்றாடத் தேவையைச் சிக்கனமாகவும் எளிதாகவும் பூர்த்தி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.