“நான் குடிகாரியா..? 40 ஆயிரத்துக்கு சரக்கா..?!” – நடிகைனா என்ன வேணும்னாலும் பேசலாமா..? அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த கஸ்தூரி…!!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் பொய் செய்திகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பணத்திற்காகவும் யூடியூப் ‘வியூஸ்’களுக்காகவும் நடிகைகளைப் பற்றி தவறான மனநிலையுடன் சிலர் அவதூறு பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாம் மது அருந்துவதை எப்போதும் எதிர்ப்பவர் என்றும், தனக்கு அந்தப் பழக்கமே இல்லை என்றும் கூறியுள்ள கஸ்தூரி, முன்பு விவாத மேடை ஒன்றில் முக்தர் என்பவர், தான் 40 ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்ததாகப் பொய் பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தனது தோழியுடன் அவர் ஜாலியாக நடனமாடிய வீடியோவை, யாரோ சமூக வலைத்தளங்களில் ‘பாரில் மது அருந்திவிட்டு ஆடுகிறார்’ எனத் தவறாகப் பதிவிட்டதால், தனது தோழி மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

சென்னை போன்ற நகரங்களில் எத்தனையோ பார்கள், பப்புகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, அங்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமா செல்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அங்கு செல்லும் மற்றவர்களை விட்டுவிட்டு, சினிமாக்காரர்களை மட்டுமே குறிவைத்து ஏன் குற்றம் சொல்கிறார்கள் என்றும் தனது பேட்டியில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.