டிகிரி மட்டும் போதாது.. கையில இந்த ஒரு சர்டிபிகேட் இருந்தா போதும்… இன்டர்வியூ அட்டென்ட் பண்ணாலே அரசு வேலை?… முழு விவரம் உள்ளே…!!!

By Rajeshwari on சித்திரை 14, 2026

Spread the love

நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் எனப்படும் தேசிய தகவல் மையத்தில் காலியாக உள்ள 243 சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த உயரிய அமைப்பில் பணிபுரிய ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

மேலும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இந்த வேலைவாய்ப்பிற்கான மிக முக்கியமான தகுதி என்னவென்றால், விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இறுதித் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

   

இநிலையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி மிகச்சிறந்த ஊதியமும், இதர சலுகைகளும் வழங்கப்படும். தொழில்நுட்பத் துறையில் அரசுப் பணியைத் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து தங்களின் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ளலாம்.