தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மகளிர் மற்றும் குடும்பத் தலைவிகளின் நலனை மையமாகக் கொண்டு 3 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, குடும்பங்களின் நிதிப் சுமையைக் குறைத்து ஆண்டுக்கு ரூ.3,000 வரை சேமிக்க உதவும் வகையில் ‘ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் கேஸ் சிலிண்டர்கள்’ வழங்கும் திட்டம், பெண்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் ‘மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண விரிவாக்கத் திட்டம்’, மற்றும் தாய்மார்களின் உடல்நலனையும் குழந்தை பராமரிப்பையும் கருத்தில்கொண்டு ‘3-வது குழந்தைப்பேறுக்கும் 365 நாள்கள் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுமுறை’ அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் ஆகிய முத்தான அறிவிப்புகளை வெளியிட்டு பெண்களின் பேராதரவைப் பெற்றுள்ளார்.
