கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நடக்கும் குரு பெயர்ச்சிக்கு பின்னர் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அதிர்ஷ்டகரமானதாக மாறும். மேலும் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க உள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் விலகும். மன சங்கடங்கள் நீங்கும். தைரியமும் தெம்பும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும். மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும் பல நல்ல நிகழ்வுகள் நடக்கும் ஆண்டாக 2026ம் ஆண்டு அமையும்.
குருபெயர்ச்சி
கடக ராசிக்காரர்களுக்கு 6, 9ம் வீட்டின் அதிபதியான குரு பகவான் வருட ஆரம்பத்தில் 12ம் வீடான விரய ஸ்தானத்தில் இருப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பெரிய முதலீடு கடன் வழங்கல் தவிர்க்க வேண்டும். கல்வி வேலை தொழில் காரணமாக செலவுகள் வரும். வரும் ஜூன் 2ம் தேதிக்குப்பின் கடகத்தில் உச்சம் பெற்று தொழில் மாற்றம் வேலை பதவி சம்பள உயர்வு கிடைக்கும். சுயதொழில் வளர்ச்சி உண்டு. அக்டோபர் 31க்கு பின்பு வரவு அதிகரித்து கடன் வசூல் சொத்து லாபம் கிடைக்கும். ராகு அஷ்டமத்தில் இருப்பதால் பண விஷயத்தில் கவனம் அவசியம்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
கடக ராசிக்காரர்களுக்கு 7, 8ம் வீட்டின் அதிபதியான சனி பகவான் 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். 2026ம் ஆண்டு முழுவதும் உற்சாகம் ஆரோக்கியம் கிடைக்கும். வேலை பதவி சம்பள உயர்வு இடமாற்றம் போன்ற முன்னேற்றங்கள் உண்டாகும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஜூன் 2க்கு பிறகு சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
ராகு பெயர்ச்சி
டிசம்பர் 5 வரை ராகு 8ம் வீட்டிலும் கேது 2ம் வீட்டிலும் இருந்து பிறகு ராகு 7ம் வீட்டுக்கும் பின்பு கேது ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைவார்கள். அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். ராகு 8ம் இடத்தில் குருவின் பார்வை பெறுவதால் அதிர்ஷ்டம் பெருகி தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். விபரீத ராஜயோகத்தால் வீடு மனை தொழில் வெற்றி அடமான சொத்துக்கள் மீட்பு புதிய வீடு சகோதரர்கள் வருமானம் எதிர்பாராத உயர் பதவிகள் கிடைக்கும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…