Categories: சினிமா

சூப்பர் ஸ்டார் பொறுமையா வரட்டும்.. பிரபல நடிகரை வைத்து ஸ்கெட்ச் போடும் நெல்சன்.. எல்லாம் ராக்ஸ்டார் பண்ண வேலை..!!

Spread the love

பிரபல இயக்குனரான நெல்சன் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. விஜய் வைத்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற சிறை கண்காணிப்பாளரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு ஜெயிலர் பட பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயிலர் 2 முடிந்த பிறகு நெல்சன் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். அதற்கு காரணம் அனிருத் தான் என சொல்கின்றனர்.

ஏனென்றால் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ரிலீசான தேவாரா திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக வேலை பார்த்தார். அவர் நெல்சன் பற்றி கூறியுள்ளார். அதன் பிறகு ஜூனியர் என்டிஆர் நெல்சன் படத்தில் நடிக்க சம்மதித்ததாக தெரிகிறது. ஜூனியர் என்டிஆர் படம் என்றாலே ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். ஆனால் நெல்சன் டார்க் காமெடி கலந்து அந்த படத்தை எடுக்கப் போகிறாராம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title

admin

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

7 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago