“இறுதிபோட்டி… கடலில் பாய்ந்து முறிந்த கழுத்து எலும்பு…” ஜூனியர் லைஃப்கார்ட் மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்…! சிகிச்சைக்கு முன் சொன்ன வார்த்தை…. கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 6, 2026

Spread the love

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் ஜூலை 31-ஆம் தேதி ஜூனியர் லைஃப்கார்ட் பயிற்சிப் போட்டியின் இறுதி நாளில் 17 வயதான ஃபின் ரெனார்ட் என்ற மாணவன் கலந்துகொண்டான். போட்டியில் தனது அணியை வெற்றிபெற வைப்பதற்காக மிஷன் பே கடலில் வேகமாகக் குதித்தபோது, எதிர்பாராதவிதமாக அவனது தலை கடலின் ஆழமற்ற தரைப்பகுதியில் பலமாக மோதியது.

இதில் ஃபின்கே மயக்கமடைந்து கழுத்து எலும்பு முறிந்தது. சக லைஃப்கார்டுகள் அவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரளவிற்குப் பேசத் தொடங்கிய அவனுக்கு, திடீரென நுரையீரல் செயலிழந்து எக்மோ மற்றும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

கை, கால்கள் இயங்காமல் பக்கவாதத்தால் முடங்கியுள்ள போதிலும், அறுவை சிகிச்சைக்கு முன்பாகத் தனது உயிரைக் காப்பாற்றப் போராடிய மருத்துவக் குழுவிற்கு ஃபின் நன்றி தெரிவித்துள்ளான். விமானியாக வேண்டும் என்ற கனவோடு இருந்த 17 வயது சிறுவனுக்கு நேர்ந்த இச்சம்பவம் உலகளவில் பலரையும் நெகிழ வைத்துள்ளதுடன், அவனது குடும்பத்திற்கு உதவக் கோரி நிதியும் திரட்டப்பட்டு வருகிறது.