“இப்போதான் களமே சூடுபிடிச்சிருக்கு வாங்க” தோத்து போனாலும் அடங்காத ஜூலி… வீடியோ வெளியிட்டு அட்டகாசம்..!!

By Swetha on வைகாசி 5, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் அறியப்படும் ஜூலி (மரியா ஜூலியானா), தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் அரசியலுக்கு வந்ததை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜூலியின் இந்த வீடியோவைக் கண்டு கோபமடைந்த விஜய்யின் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஜூலி விளம்பரத்திற்காகவே இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிப்பதாகப் பலரும் அவரைச் சாடி வருகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Julie (@mariajuliana_official)

கடந்த காலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சில போராட்டங்கள் மூலம் பிரபலமான ஜூலி, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது விஜய்யை விமர்சித்ததன் மூலம் அவர் மீண்டும் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த வீடியோ தொடர்பான விவாதம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.