பிக்பாஸ் புகழ் ஜூலி தனது கர்ப்ப காலம் குறித்து சமூக வலைதளங்களில் வக்கிரமான முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளியிட்டுள்ள ஆவேசமான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது ஜூலியின் கர்ப்பம் குறித்த தகவல்கள் வெளியே வந்த நிலையில், நெட்டிசன்கள் சிலர் அவரது கடைசி மாதவிடாய் தேதியைக் கணக்கிட்டு அவர் மீது பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பி வந்தனர். இதற்கு விளக்கமளித்து ஜூலி வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மாதவிடாய் சுழற்சியைக் கணக்கிட்டு விமர்சிக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும், அதற்கான மருத்துவ மற்றும் சட்டப்பூர்வமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சைபர் புல்லிங் மூலம் ஏற்கனவே ஒருவரைக் கொன்றுவிட்ட நிலையில், தன்னை அடுத்த இலக்காக வைத்துத் தாக்குபவர்களின் விமர்சனங்களுக்குத் தான் பயந்துவிட மாட்டேன் என்றும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். ஜூலியின் இந்த தைரியமான மற்றும் உணர்ச்சிபூர்வமான பதிலடிக்குத் திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்
