தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தனது முதல் ஊழலைச் செய்துவிட்டது என விமர்சித்து பிக்பாஸ் புகழ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு, முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி என்ற அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் அதிகார துஷ்பிரயோகம் எனப் பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நியமனத்தை கடுமையாகச் சாடியுள்ள ஜூலி, இது ஒரு வகையான ஊழல் நடவடிக்கை எனத் தனது வீடியோவில் விமர்சித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சமூக வலைத்தளவாசிகளும் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜூலியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக ஆதரவாளராக அறியப்படும் ஜூலி, விஜய்யை விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலியைத் தொடர்ந்து பிக்பாஸ் முத்துக்குமரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் விஜய்யின் இந்தச் செயல் குறித்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஜோதிடர் ஒருவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது முறையற்றது என விமர்சனங்கள் வலுத்து வரும் அதே வேளையில், தவெக தரப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் இந்த நியமனத்தை நியாயப்படுத்தி வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் தற்போது இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
