ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜூலி, நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரை குறித்த தனது விமர்சனத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். வேலூரில் விஜய் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வழக்கம் போல இந்தப் பேச்சிலும் ஆக்கபூர்வமான விஷயங்கள் ஏதுமில்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது பேச்சில் ஜல்லிக்கட்டுக் காளையை ஒரு குழந்தை புல்லுக்கட்டு காட்டி ஓரமாக அழைத்துச் சென்றதாகக் குறிப்பிட்டதை ஜூலி கடுமையாகச் சாடியுள்ளார். விஜய்யின் கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என்பதால், அவர்கள் காளையிடம் புல்லுக்கட்டு காட்ட முயன்று ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், 50 பேரை 500 ஆக்கிவிட வேண்டாம் என எச்சரித்துள்ளார். ரசிகர்களுக்கு விபரீதம் ஏதும் ஏற்பட்டால் மீண்டும் போராடுவதற்கு யாரிடமும் திராணி இல்லை என்றும், எதையும் யோசித்து பக்குவமாகப் பேசுமாறும் விஜய்க்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…