செம ஷாக்..! “என்னைப் போல் 10 பெண்களை” மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்..!!

By Soundarya on ஐப்பசி 9, 2025

Spread the love

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸிலடா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதமாக டிரெண்டாகி வருகிறது. தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக   ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்கள் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னைப் போல 10 பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

அத்துடன், தனக்கும் தனது குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் அதற்கு ரங்கராஜ் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார், ஜாய் கிரிசில்டா. இந்த விஷியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.