Categories: சினிமா

சுய மரியாதை இல்லாததால் சீரியலிலிருந்து விலகிய நடிகை… ரசிகர்களுக்கு வெளியிட்ட பதிவு..!

Spread the love

நடிகர்  லிவிங்ஸ்டன் மகள் நடிகை ஜோவிதா ஜீ தமிழில் தொடங்கிய மௌனம் பேசியதே என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அதிலிருந்து விலகுவதாக அறிவித்து அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். தமிழ் சின்னத்திரைகளில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக ஜீ தமிழ் இருந்து வருகிறது.  இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து புதிய புதிய செயல்களை களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நெஞ்சத்தைக் கிள்ளாதே என புதுப்புது சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அந்த வரிசையில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மௌனம் பேசியதே. அசோக், ஜோவிதா, சத்யா உட்பட பலரும் இதில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ஜோவிதா அறிவித்தார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” என்னுடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்குமே இந்த சீரியலில் இருந்து நான் விரைவில் விலகப் போகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிது காலம் சீரியல்ன் கதைக்களத்தின் படி என்னுடைய நடிப்பு, கேரக்டர், தொழில் தேர்வுகளையும் மாற்றிக்கொள்ள விரும்பினேன். துளசி வேடத்தில் என்னுடைய நடிப்பு எனக்கு அதிக திருப்தி தரவில்லை என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அது சுயநலமாகவும் நீண்ட காலம் மனசோர்வுடனும் நம்முடைய கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரானதாகவும் மாறியது. ஒரு முக்கிய கதாபாத்திரமாக இவ்வளவு சுயநலமான கதாபாத்திரத்தில் நடைபெற்றது எனக்கு தெரியவில்லை.

எனக்கு வாழ்க்கை வாழ்வது என்பது நேர்மை, சுயமரியாதை குறித்தது. அந்த குணங்களை பெறவும் அந்த நபராக இருக்கவும் நான் மிகவும் முயற்சித்தேன். ஆனால் என்னை பற்றி மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். சமீப காலமாக என்னுடைய கொள்கையில் இருந்து நழுவ விலகி உள்ளேன். அதனால் தான் மௌனம் பேசியதே சீரியல் இருந்து விலகுகிறேன். இதுவரை நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்து வந்த அன்புக்கு மிக்க நன்றி நிச்சயம் விரைவில் வேறு ஒரு திட்டத்தோடு வருவேன்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

27 minutes ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

33 minutes ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

37 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

58 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

1 மணத்தியாலம் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

1 மணத்தியாலம் ago