BREAKING: CM விஜய்க்கு பதிலாக இவர்… யாரும் எதிர்பாராத திருப்பம்…. தமிழக அரசியலை உலுக்கும் தவெக-வின் மாஸ்டர் பிளான்….!

By Nanthini on ஆடி 10, 2026

Spread the love

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளரும் முதலமைச்சரின் ஆலோசகருமான ஜான் ஆரோக்கியசாமி போட்டியிட உள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு முறையான அதிகாரப்பூர்வ பதவியை அளிக்கும் நோக்கில் தவெக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலோசகர் என்ற நிலையில் இருந்து அவரை நேரடியாக அமைச்சரவைக்குள் கொண்டு வர முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்த இடைத்தேர்தலில் அவரை நேரடியாகக் களம் இறக்க தவெக திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.