“30 தெருநாய்கள் பட்டாளத்தால் ஸ்தம்பித்த ஜோத்பூர்…” வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 32-ல் உள்ள கீதா பவன் பகுதி சந்துகளில், கடந்த 4 நாட்களாக 25 முதல் 30 தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உறைந்துபோயுள்ளனர்.

ஒரே நேரத்தில் இத்தனை நாய்கள் கூட்டமாகத் திரண்டு இரவு பகலாக இடைவிடாது குரைப்பதும், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு சாலையில் நடந்து செல்லும் வழிப்போக்கர்களைத் துரத்துவதுமாக உள்ளதால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

   

திடீரென இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நாய்கள் எங்கிருந்து வந்தன என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு நடத்தி, தெருநாய்கள் தொல்லையிலிருந்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.