குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு ஏதுவாக மற்ற மாவட்டத்திற்கு பணியிடம் மாறுதல் கேட்டு பெண் காவலர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இந்த நிலையில் செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்கள் அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிடம் மாறுதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த இருந்தார். இதனை தொடர்ந்து மொத்தம் 29 பெண் காவல் ஆளிநர்கள் தங்களுடைய பேறுகால விடுப்பிற்கு பிறகு குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு ஏதுவாக மற்ற மாநகரம் அல்லது மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள்.
அதன்படி3.6.2025 வரை பணியிடமாதல் கேட்டு விண்ணப்பித்திருந்த மேற்கண்ட 209 பெண் காவலர் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு அல்லது மாநகரத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
