எழுத்து தேர்வு கிடையாது…! டிகிரி படித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (UIIC), 2026-ஆம் ஆண்டிற்கான பயிற்சி பணியாளர் (Apprentice) இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 153 காலியிடங்களில், தமிழகத்திற்கு மட்டும் 19 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

குறிப்பாக 2021 முதல் 2025-ஆம் ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்ற 21 முதல் 28 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

   

இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சமே, எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவதுதான். தேர்வாகும் நபர்களுக்குப் பயிற்சி காலத்தின் போது மாதம் ரூ. 9,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

   

விருப்பமுள்ளவர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.01.2026 ஆகும். அரசு காப்பீட்டு நிறுவனத்தில் பணி அனுபவம் பெற விரும்பும் பட்டதாரிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த தொடக்கமாகும்.